Sunday, 17 June 2012

சுறா - The Leader



இந்த திரைப்படத்திற்கு நான் என் நண்பர்களுடன் முதல் நாள் evening show சென்றேன்
(பார்த்தேன் என்று சொல்ல மாட்டேன் ). திருச்சி கலைஅரங்கம் தியேட்டரில்
ரூபாய் 40 க்கு first class டிக்கெட் கிடைத்தது . இதுவே போதும் நாங்கள் 10 நிமிடங்கள்
உட்கார்ந்து வெளியேறினோம் என்பது உங்களுக்கு கூறவேண்டாம் .

நேற்று இரவு இன்டர்நெட்டில் பார்த்தேன். விமர்சனத்துக்கு வருவோம். 
ஒரே புயல் ... ஒரே மழை ... கடலோர மக்களை எல்லாம் கடல் தேவி உள்ளிழுத்து 
செல்லும் வேளையில், எல்லோரையும் காப்பாற்றிய நம்மது ஊர் காவலர், சுறா 
மட்டும் காணவில்லை .ஊரே ஒப்பாரி வைக்கும் தருணத்தில், 
நடுகடலில் இருந்து ஜம்பிங்கில் வருகிறார் இளைய தளபதி. (நல்ல வேலை இந்த கொடுமைய பெரிய திரையில் பார்க்கவில்லை) . சரி போகட்டும்நு பாத்தா, இவர வெச்சுதான் அந்த குப்பமே கொண்டாடுது.. வழக்கம் போல அரசியல் வில்லன் இவங்க குப்பத்த வளைச்சு போட முயற்சி செய்யிராரு. correct !!!!! அத நம்ம ஹீரோ தடுக்குராறு. திடீர்னு கார்ல வாராரு, திடீர்னு போட்ல போறாரு சத்தியமா என்ன நடக்குதுன்னு புரியவே இல்லை .  அவரு என்னடானா பீச் ல பட்டா வாங்கி அந்த மக்களுக்கு குடுக்குறாரு. அத இடிக்க வாராரு நம்ம வில்லன். இது போதுமே அவங்க போட்டுக்கற கொழாயடி சண்டையும் குடுமி புடி சண்டையும் தான் முழுக்க.
 
வடிவேலு வரும் ஒன்று இரண்டு காட்சிகள் பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கும். அடடே முக்கியமான ஒன்று அதாங்க கதாநாயகி ... தமண்ணா எதுக்காக இந்த படத்துல நடிச்சோம், நம்ம என்ன பண்ணோம்னு எதுவும் புரியாம வளம்வராங்க. S.P. ராஜ்குமார் விவரம் கூறாமல் கப்பலில் வேலை என்று கூறி தமண்ணாவை சேர்த்திருப்பார் போல. 
 
தமண்ணா நம்ம விஜய லவ் பண்றாங்க. அவங்க பணம் காசு எதுவும் வேண்டாம்னு இவர் கூட குப்பத்துல குப்பகொட்ட தயார்னு மேல விழுந்து டூயட் எல்லாம் பாடறாங்க. அப்புறம் அவ்ளோ தான் அவங்க ரோல் ஓவர்.
 
விஜய் ரசிகர்களையே முகம் சுளிக்க வைக்கும்  பகுத்தறிவற்ற சில காட்சிகளை தயாரிப்பாளர் சற்று கவனித்திருக்கலாம். உதாரணத்திற்கு விரலை சொடுக்கி அடுப்பு பற்றவைக்கும் காட்சி மற்றும் பல.
இசை... இங்கதாங்க நான் மெய் சிலிர்த்து போனேன் .... அது எப்டிங்க மணி ஷர்மா சார் ? ஒரு பாட்டு கூட கேட்க முடியாத அளவுக்கு இசை அமைச்சிருக்கீங்க . பாராட்டுக்கள் . என் வசம் fast forward என்ற ஒன்று இருப்பதால் தப்பித்தேன் பாவம் theatre வாசிகள்.
 
மொத்தத்தில் சுறா - புட்டு வேகவில்லை