Sunday 17 June 2012

சுறா - The Leader



இந்த திரைப்படத்திற்கு நான் என் நண்பர்களுடன் முதல் நாள் evening show சென்றேன்
(பார்த்தேன் என்று சொல்ல மாட்டேன் ). திருச்சி கலைஅரங்கம் தியேட்டரில்
ரூபாய் 40 க்கு first class டிக்கெட் கிடைத்தது . இதுவே போதும் நாங்கள் 10 நிமிடங்கள்
உட்கார்ந்து வெளியேறினோம் என்பது உங்களுக்கு கூறவேண்டாம் .

நேற்று இரவு இன்டர்நெட்டில் பார்த்தேன். விமர்சனத்துக்கு வருவோம். 
ஒரே புயல் ... ஒரே மழை ... கடலோர மக்களை எல்லாம் கடல் தேவி உள்ளிழுத்து 
செல்லும் வேளையில், எல்லோரையும் காப்பாற்றிய நம்மது ஊர் காவலர், சுறா 
மட்டும் காணவில்லை .ஊரே ஒப்பாரி வைக்கும் தருணத்தில், 
நடுகடலில் இருந்து ஜம்பிங்கில் வருகிறார் இளைய தளபதி. (நல்ல வேலை இந்த கொடுமைய பெரிய திரையில் பார்க்கவில்லை) . சரி போகட்டும்நு பாத்தா, இவர வெச்சுதான் அந்த குப்பமே கொண்டாடுது.. வழக்கம் போல அரசியல் வில்லன் இவங்க குப்பத்த வளைச்சு போட முயற்சி செய்யிராரு. correct !!!!! அத நம்ம ஹீரோ தடுக்குராறு. திடீர்னு கார்ல வாராரு, திடீர்னு போட்ல போறாரு சத்தியமா என்ன நடக்குதுன்னு புரியவே இல்லை .  அவரு என்னடானா பீச் ல பட்டா வாங்கி அந்த மக்களுக்கு குடுக்குறாரு. அத இடிக்க வாராரு நம்ம வில்லன். இது போதுமே அவங்க போட்டுக்கற கொழாயடி சண்டையும் குடுமி புடி சண்டையும் தான் முழுக்க.
 
வடிவேலு வரும் ஒன்று இரண்டு காட்சிகள் பணம் கொடுத்து படம் பார்க்க வந்தவர்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கும். அடடே முக்கியமான ஒன்று அதாங்க கதாநாயகி ... தமண்ணா எதுக்காக இந்த படத்துல நடிச்சோம், நம்ம என்ன பண்ணோம்னு எதுவும் புரியாம வளம்வராங்க. S.P. ராஜ்குமார் விவரம் கூறாமல் கப்பலில் வேலை என்று கூறி தமண்ணாவை சேர்த்திருப்பார் போல. 
 
தமண்ணா நம்ம விஜய லவ் பண்றாங்க. அவங்க பணம் காசு எதுவும் வேண்டாம்னு இவர் கூட குப்பத்துல குப்பகொட்ட தயார்னு மேல விழுந்து டூயட் எல்லாம் பாடறாங்க. அப்புறம் அவ்ளோ தான் அவங்க ரோல் ஓவர்.
 
விஜய் ரசிகர்களையே முகம் சுளிக்க வைக்கும்  பகுத்தறிவற்ற சில காட்சிகளை தயாரிப்பாளர் சற்று கவனித்திருக்கலாம். உதாரணத்திற்கு விரலை சொடுக்கி அடுப்பு பற்றவைக்கும் காட்சி மற்றும் பல.
இசை... இங்கதாங்க நான் மெய் சிலிர்த்து போனேன் .... அது எப்டிங்க மணி ஷர்மா சார் ? ஒரு பாட்டு கூட கேட்க முடியாத அளவுக்கு இசை அமைச்சிருக்கீங்க . பாராட்டுக்கள் . என் வசம் fast forward என்ற ஒன்று இருப்பதால் தப்பித்தேன் பாவம் theatre வாசிகள்.
 
மொத்தத்தில் சுறா - புட்டு வேகவில்லை

Thursday 3 May 2012

பேரரசு

 
 
மனிதன் தனிமையில் இருந்தால் என்ன என்ன சிந்தனைகள் வருகிறது? அப்படியே தனிமையில் வார கடைசியாக இருப்பதால் சற்றே இளைப்பாற்ற ஒரு படம் பார்த்தல் என்ன என்று தோனியது. படம் என்றதும் கேப்டன் தான் முதலில் நினைவுக்கு வந்தார் சரி, நமக்காக ஆயிரம் வெப்சைட் இல் இலவச சினிமா உள்ளன என்று தேடியபோது லொட் என்று பேரரசு என்ற தலைப்பு தெரிந்தது . விட்டுவிடுவேனா என்ன. சரி இனி படம் பார்ப்போம்.
 
ஒரு ஊர்ல ஒரு ஜட்ஜ் இருந்தாராம். அவரு திடீர்னு காணாமல் போய் விடுகிறார். அவரை கண்டு புடிக்க முடியாமல் திணறும் காவல் துறை என்ன செய்யும்? CBI அதிகாரி காசி விஸ்வநாதன் மட்டும் தான் இதற்கு உள்ள ஒரே தீர்வு . ஆம்... அவர் தான் நமது கேப்டன் . வழக்கம் போல அவரை சுற்றி சுற்றி ஒரு வட நாட்டு ஹீரோஇன் வருகிறார். பாவம், வழக்கம் போல டூயட் மற்றும் குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற முக்கியமான காட்சிகளில் தரிசனம் தருகிறார்.
 
இப்போ முக்கியமான பகுதிக்கு வருவோம். அதானுங்க துப்பறிதல். எப்டியோ ஆண, குதிரை எல்லாம் செஞ்சு நம்ம காசி விஸ்வநாதன் ஊர்ல நடக்குற பிக் பாக்கெட் ல இருந்து பெரிய பெரிய குண்டு வெடிப்பு வரைக்கும் சமந்தப்பட்டு இருக்கிறது ஒரு அரசியல் வாதி மூன்று பெரிய போலீஸ் அதிகாரியின் துணையோடு என்று  கண்டுபுடிசுடுராறு . இதற்கு தொணைக்கு ஆனந்த ராஜ் மற்றும் கட்டவிரல் ஒசரம் இருக்கற constable பாண்டிய ராஜன் .
 
சொல்லி வெச்ச மாதிரி அந்த கெட்ட போலீஸ் அதிகாரிய யாரோ கொல்றாங்க . இப்போ தான் ஆட்டத்துல விறுவிறுப்பு . அவங்கள கொல்றது நம்ம காசியோட ஒட்டி பிறந்த சகோதரன் "பேரரசு" . அவங்க எப்டி பிரிஞ்சாங்க அப்டிங்கறது எல்லாம் ஒன்னும் தெளிவா படியல ஆகவே அத விட்ருவோம். வழக்கம் போல கேப்டன் இன் தந்தை (சரத் பாபு) ரொம்ப நல்லவரு. அவர பிரகாஷ் ராஜ் , மன்சூர்அலிகான் கொன்னுடுறாங்க அத பாத்தபேரரசு பழி வாங்குறாரு. பேரரசுக்கு தொட்டுக்க (மன்னிக்கவும்) தொணைக்கு சந்திரசேகர் , மற்றும் அவர் கிராமம் உள்ளது . இதை கண்டு பிடித்த காசி , பிளாஷ் பாக்கில் முழு கதை அறிந்து இருந்தும், காவலன் கடமை பேரரசுவை கைது செய்வேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயற்சிக்கிறார். எப்டின்னு தெரியல ஆனா பேரரசு மற்றும் காசி போட்ற டிரஸ் கலர் அதில் உள்ள மடிப்பு முதல் கொண்டு ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது (சூபர் சார் போங்க) ... 
 
கடைசி காட்சியில் வெடிகுண்டு வைத்த நாற்காலியில் பிரகாஷ் ராஜ் உட்கார்ந்த நிலையில், காசியை காப்பாற்ற வெகுண்டு ஓடுகிறார் பேரரசு . வெடிகுண்டு நிபுணர்கள் "புத்திசாலிதனமாக இந்த வெடிகுண்டு வெச்சுருக்காரு நு மெச்சுக்கும்போது எதனால் என்னை அடித்துக்கொள்வது என்ற எண்ணம் மேலோங்கியது. வெடிகுண்டை செயலிழக்க செய்த பேரரசு அங்கே நடக்கும் ரத்தகலரியில் மாண்டு மடிகிறார். காசி பிரகாஷ் ராஜை கொன்றவுடன் தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. படம் முடிந்தது என்று என்னும் சமயத்தில் பல குண்டுகளை உள்வாங்கிய பேரரசு , காசியிடம் சென்று துப்பாக்கியை வாங்கிக்கொள்கிறார். அவோரோட range க்கு கொஞ்சமாக டயலாக் பேசிவிட்டு சாகிறார் .
 
அப்பாடா முடிந்தது. மொத்தத்தில் பேரரசு - பேரிழப்பு 

Monday 16 April 2012

தர்மபுரி


இப்படியாக பல நாட்கள் திரை விமர்சனம் எழுதாமல் கை ரொம்பவே மரத்து போனதைபோல் உள்ளது . மீண்டும் ஆரம்பிக்கும் இந்த நல்ல வேளையில் திரு கேப்டன் அய்யா நடித்த தர்மபுரி ஐ பற்றி பார்ப்போம் .

பேரரசு அவர்களுக்கு முதலில் ஒரு ஷொட்டு வைத்து மேலே செல்வோம். நம்ம தமிழ் படங்களில் அதிலும் கேப்டன் நடிக்கும் படங்களில் எப்போதுமே "entry " சிறப்பாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அவ்வகையில் தலைவர் ஒரு மந்திரியின...் மகளை ரௌடியிடம் இருந்து காப்பாற்றுகிறார். அட என்னய்யா தெரியாதா காப்பாத்திவிடுவார்னு எல்லாருக்கும் தெரியும்னு நீங்க சொல்லுறது கேக்குது ... அவர் எப்டி காப்பாத்துராருங்கறது தான் விஷயம் . போலீஸ் பட்டாளமே பயந்து நிக்கும் போது இவர் வெறும் கைய வீசிக்கிட்டு முன்னேருராறு . அதுல அந்த ரௌடியவும் சொல்லணும். ரொம்ப நல்ல மாதிரியா இருக்காரு. மூணு முறை சொல்லிப்பாத்துட்டு பிறவு தான் சுடுராறு. ஆனா நம்ம ஹீரோ சட்டைக்கு உள்ள ஒளித்து வைத்திருந்த அர்ச்சனை தட்டில் பட்டு திரும்பி ஜோய்யுனு போய் வில்லன் காலி . மற்றபடி சுற்றி உள்ள மக்கள் எல்லாம் பாவம் நீங்க தான் வருங்கால முதல்வர், பிரதமர்னு சொல்றது வடிவேலு வின் விழுப்புரம் மீட்டிங்கை நினவு படுத்தியது. பேரரசு கூட்டல் விஜயகாந்த் என்றால் பஞ்சுக்கு குறைவில்லை (நம்ம காதுக்கு தான் பஞ்சு - cotton பற்றாமல் போனது)
சில உதாரணங்கள் கீழ் வருமாறு :
1 . நான் அடங்கி போறவன் இல்லை அடக்கிட்டு போறவன் - (எதை அடக்கிட்டு போவாருன்னு அவர் சொல்லததுனால் நீங்கள் fill பண்ணிக்குங்க)
2 . இவரு கூட்டணி வைக்க மாட்டார் ,தனி ஆளா தான் இருப்பார் - (ஆமாம் அது என்ன கூட்டணி வெச்சுட்டு போகுற எடமா? )
3 . என்னை நம்புனா நம்பிக்கை ..மத்தவங்களுக்கு எச்சரிக்கை - (முடியல )
4 . இவர் நாடோடி இல்லை ....நாடோடி மன்னன் - (சரி அதுல உனக்கு என்ன பெரும? )

வழக்கம் போல சென்சர் certificate வருதோ இல்லையோ பேரரசு ஒரு சீன் ஆவது வந்துடுவாரு. இந்த படத்தில் புதுமையாக, அவர் எடுத்து flop ஆன படங்களின் பெயர் பட்டியலை கூறி, கடைசியில் இதுவும் ஊத்திக்கும் அப்டின்னு சூசகமா சொல்லுறாரு "நான் பொறந்த எடம் சிவகாசி , வளர்ந்த இடம் திருபாச்சி , போன இடம் திருப்பதி ,இப்போ நிக்கறது தர்மபுரி இன்னும் நெறைய இடம் போவேன் " - (அப்படியினா இன்னும் பல பட்டிகள் ஊருகள் பெயரில் படம் எடுத்து நம்ம தாலி அறுக்க போறாரா? )

காரில் பாடல் கேட்க நாம் உபயோகிக்கும் ரிமோட் வைத்து வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் காட்சி வடிவேல், சிங்கமுத்து, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு கலக்கத்தை உருவாக்கியதாகவே படுகிறது . அப்படியே கிளைமாக்ஸ் வரையில் பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் குறைந்தபட்சம் ஒரு இரண்டு நாட்கள் ஆகும் என்று தோன்றியமையால் வெடுக்கென்று தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு வாய் விட்டு அழுதேன் . மொத்தத்தில் பேரரசின் தர்மபுரி வாய்க்கரிசி .