Monday, 16 April 2012

தர்மபுரி


இப்படியாக பல நாட்கள் திரை விமர்சனம் எழுதாமல் கை ரொம்பவே மரத்து போனதைபோல் உள்ளது . மீண்டும் ஆரம்பிக்கும் இந்த நல்ல வேளையில் திரு கேப்டன் அய்யா நடித்த தர்மபுரி ஐ பற்றி பார்ப்போம் .

பேரரசு அவர்களுக்கு முதலில் ஒரு ஷொட்டு வைத்து மேலே செல்வோம். நம்ம தமிழ் படங்களில் அதிலும் கேப்டன் நடிக்கும் படங்களில் எப்போதுமே "entry " சிறப்பாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். அவ்வகையில் தலைவர் ஒரு மந்திரியின...் மகளை ரௌடியிடம் இருந்து காப்பாற்றுகிறார். அட என்னய்யா தெரியாதா காப்பாத்திவிடுவார்னு எல்லாருக்கும் தெரியும்னு நீங்க சொல்லுறது கேக்குது ... அவர் எப்டி காப்பாத்துராருங்கறது தான் விஷயம் . போலீஸ் பட்டாளமே பயந்து நிக்கும் போது இவர் வெறும் கைய வீசிக்கிட்டு முன்னேருராறு . அதுல அந்த ரௌடியவும் சொல்லணும். ரொம்ப நல்ல மாதிரியா இருக்காரு. மூணு முறை சொல்லிப்பாத்துட்டு பிறவு தான் சுடுராறு. ஆனா நம்ம ஹீரோ சட்டைக்கு உள்ள ஒளித்து வைத்திருந்த அர்ச்சனை தட்டில் பட்டு திரும்பி ஜோய்யுனு போய் வில்லன் காலி . மற்றபடி சுற்றி உள்ள மக்கள் எல்லாம் பாவம் நீங்க தான் வருங்கால முதல்வர், பிரதமர்னு சொல்றது வடிவேலு வின் விழுப்புரம் மீட்டிங்கை நினவு படுத்தியது. பேரரசு கூட்டல் விஜயகாந்த் என்றால் பஞ்சுக்கு குறைவில்லை (நம்ம காதுக்கு தான் பஞ்சு - cotton பற்றாமல் போனது)
சில உதாரணங்கள் கீழ் வருமாறு :
1 . நான் அடங்கி போறவன் இல்லை அடக்கிட்டு போறவன் - (எதை அடக்கிட்டு போவாருன்னு அவர் சொல்லததுனால் நீங்கள் fill பண்ணிக்குங்க)
2 . இவரு கூட்டணி வைக்க மாட்டார் ,தனி ஆளா தான் இருப்பார் - (ஆமாம் அது என்ன கூட்டணி வெச்சுட்டு போகுற எடமா? )
3 . என்னை நம்புனா நம்பிக்கை ..மத்தவங்களுக்கு எச்சரிக்கை - (முடியல )
4 . இவர் நாடோடி இல்லை ....நாடோடி மன்னன் - (சரி அதுல உனக்கு என்ன பெரும? )

வழக்கம் போல சென்சர் certificate வருதோ இல்லையோ பேரரசு ஒரு சீன் ஆவது வந்துடுவாரு. இந்த படத்தில் புதுமையாக, அவர் எடுத்து flop ஆன படங்களின் பெயர் பட்டியலை கூறி, கடைசியில் இதுவும் ஊத்திக்கும் அப்டின்னு சூசகமா சொல்லுறாரு "நான் பொறந்த எடம் சிவகாசி , வளர்ந்த இடம் திருபாச்சி , போன இடம் திருப்பதி ,இப்போ நிக்கறது தர்மபுரி இன்னும் நெறைய இடம் போவேன் " - (அப்படியினா இன்னும் பல பட்டிகள் ஊருகள் பெயரில் படம் எடுத்து நம்ம தாலி அறுக்க போறாரா? )

காரில் பாடல் கேட்க நாம் உபயோகிக்கும் ரிமோட் வைத்து வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் காட்சி வடிவேல், சிங்கமுத்து, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு கலக்கத்தை உருவாக்கியதாகவே படுகிறது . அப்படியே கிளைமாக்ஸ் வரையில் பார்க்கலாம் என்று முயற்சி செய்தால் குறைந்தபட்சம் ஒரு இரண்டு நாட்கள் ஆகும் என்று தோன்றியமையால் வெடுக்கென்று தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு வாய் விட்டு அழுதேன் . மொத்தத்தில் பேரரசின் தர்மபுரி வாய்க்கரிசி .

No comments:

Post a Comment